கணினி திரையில் காண்பவற்றை காணொளிகளாக (Video) அல்லது நிழல்படமாக (screenshot) எடுப்பதற்கு FRAPS மென்பொருள் (software) உதவுகிறது.
கணினி சம்பந்தப்பட்ட கட்டுரைகளை சிலகாலமாகவே எழிதி வந்துள்ளோம்.
கணினி சம்பந்தப்பட்ட சில அலோசனைகளை அல்லது சில செயலிகளை (Programm) எவ்வாறு பயண்படுத்துவது என்பதை எழித்தின் மூலம் மட்டுமின்றி கணொளிகளாக பதிவு செய்து யூடூப்பில் (Youtube)வெளியிட விரும்பினோம்.
உதாரணமாக எவ்வாறு இணையத்தள் பக்கங்களை உருவாக்குவது?
எவ்வாறு நிழல்படங்களை கணினியில் திருத்துவது( Photo Editing)?
எவ்வாறு கணினியில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது?
போன்ற விடயங்களை காணொளிகளாக பதிவு செய்து வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு எந்த செயலி சிறப்பாக உதவும் என்பதை அறிய இணையத்தில் உலா வந்த போது கண்ணில் பட்ட ஒரு நல்ல மென்பொருளை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினோம்.
பொதுவாக திரையில் காண்பவற்றை நிழல்படமாக பதிவதற்கு விண்டோஸில் உள்ள பந்தமே போதுமானது.
ஆனால்
DirectX- மற்றும் OpenGL- போன்ற செயலிகளிக்கு விசேஷச tools தேவைப்படுகிறது.
இந்த மென்பொருள் கணினி திரையை வெறும் படமாக மட்டும் பதியாமல், காணொளிகளை AVI-வடிவூட்டத்திலும் பதிகிறது.
FRAPS பதிப்பென்: 3.0 மேலுமாக DirectX 11 மற்றும் Windows 7 அனுசரிக்கிறது.
இந்த புதிய பதிப்பில் இதன் ஆடையும் மாற்றப்பட்டுள்ளது கவணத்துக்குறியது.
இதில் என்னென்ன புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை இதன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
0 கருத்துரைகள்