www.tamil.com.nu

முயற்சி இருந்தால்
சிகரத்தையும் எட்டலாம்

உங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்ற

இணையத்தில் நம் சொந்த கருத்துக்களை பகிர இந்த பிளாக்ஸ்பாட் தளம் அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. வலைப்பதிவு என்பது என்ன என்று கூட தெரியாமல்  பதிவர்களில் பெரும்பாலானோர்(என்னையும் சேர்த்து) விளையாட்டாக வலைப்பதிவு தொடங்கி பதிவு போடுகிறோம். இப்படி விளையாட்டாக பதிவு போட ஆரம்பித்து நாளடைவில் நாம் விளையாட்டாகா தொடங்கிய வலைப்பதிவு பிரபலமானவுடன் நமக்கென்று ஒரு சொந்த டொமைன் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றும்.

ஆனால் இப்படி தொடங்கினால் இந்த இப்பொழுது வரும் வாசகர்களை இழந்து விடுவோமோ அல்லது புது டொமைன் வாங்கினால் நாம் தளத்தில் உள்ள அனைத்து விட்ஜெட்டுக்களையும் திரும்பவும் இணைக்கவேண்டுமா என்ற அச்சத்தின் பேரிலேயே பெரும்பாலானோர் டொமைன் வாங்குவதை தவிர்க்கின்றனர். கவைலையை விடுங்கள் பிளாக்ஸ்பாட்டை சுலபமாக சொந்த டொமைனுக்கு மாற்றுவது எவ்வாறு என்று கூறுகின்றேன். இதை செய்ய நீங்கள் எங்கும் செல்ல வேண்டியதில்லை நம் பிளாக்கிலேயே செய்து முடித்து விடலாம். (ஆனால் ஒன்று மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் இப்பொழுது உங்கள் பிளாக்கிற்கு இருக்கும் அலெக்சா ரேங்க் புதிய டொமைன் வாங்கினால் இருக்காது)

  • Dassboard - Settings - Publishing -பகுதிக்கு செல்லுங்கள்.

  • சென்று அங்கு உள்ள Custom Domain என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.வரும் விண்டோவில் உங்களுக்கு வேண்டிய டொமைன் பெயரை சரியாக கொடுக்கவும்.

  • பெயரை கொடுத்து Check Availability என்பதை க்ளிக் செய்யவும். நீங்கள் கொடுத்த URL காலியாக இருந்தால் yourdomain.com is available என்ற செய்தி வரும் இல்லையேல் உங்களுக்கு கொடுத்த பெயருக்கு சார்ந்து உள்ள URL கொடுக்கும் அதில் இருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
  • அடுத்து வரும் விண்டோவில் Continue to registration என்ற பட்டனை அழுத்தி வரும் விண்டோவில் உங்களின் தகவல்களை சரியாக பொருத்தி accept கொடுக்கவும்.
  • அடுத்து payment செய்யும் விண்டோ வரும் இதில் உங்களின் கிரெடிட் கார்ட் அல்லது டெபிட் கார்டின் எண்ணை சரியாக கொடுத்து உங்களுடைய domain உருவாக்கி கொள்ளுங்கள்.
  • கீழே உள்ள வீடியோவை பார்த்தால் உங்களுக்கு தெளிவாக புரியும். 

அவ்வளவு தான் இனி உங்களுடைய பிளாக்ஸ்பாட் URL கொடுத்தால் நேரடியாக உங்கள் புதிய டொமைன் url தளம் ஓபன் ஆகும். ஆகையால் உங்கள் வாசகர்களுக்கும் எந்த கடினமும் இருக்காது.

thanksvandhemadharam

0 கருத்துரைகள்

Kommentar veröffentlichen

Powered By Blogger