டீம் விவ்வர் பயன்பாடுகள்..
நீங்கள் தற்போது வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம்... அந்த சமயத்தில் முக்கியமான உங்கள் கணிணியில் சேமிக்கபட்ட தகவல் ஒன்று உங்களுக்கு அந்த சமயத்தில் தேவை... அந்த சமயத்தில் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ உங்கள் கணிணியை நீங்கள் ஆன் லைனில் இயக்கி தகவல்களை பெற முடியும்..
பெரும் பாலும் சிஸ்டம் அட்மினிஸ்டெட்டர்கள் .... பல மாடி கட்டித்தில் ஒரே ஒருவர் தான் இருப்பார்... எந்த கணிணியில் தகறாரு என்றாலும் முன்பெல்லாம் அந்த புளோருக்கும் இந்த புளோருக்கும் ஜங்கு ஜங்கு அலைந்து திரிவார்கள்... உக்கார்ந்த இடத்தில் இருந்தே .. மென் பொருளை நிறுவ வைரஸால் பழுதுபட்ட கணிணியை சரி செய்ய பயன்படுவதுதான் டீம் விவ்வர்..
சிலர் வீட்டில் இருந்தே அலுவலகத்தில் உள்ள கணிணியை இயக்கி பணி புரிவார்கள் அந்த கோஸ்டிகள் பயன்படுத்துவதும் இவ்வாறன ஒரு மென் பொருளையே...
முக்கியமானது: கணைட் செய்ய இருக்கும் இரண்டு கணிணியிலும் இந்த மென்பொருள் நிறுவி இருக்கவேண்டும்...
இயக்கும் முறை : தகவல் பெற இருக்கும் கணிணியை ... உங்கள் வீட்டில் உள்ளவர்களையோ அல்லது அலுவலகம் என்றால் சக அலுவர்களையோ இயக்க செய்து... அந்த டீம் விவ்வர் மென்பொருளை இயக்க சொல்லவேண்டும்...
அப்படி இயக்க சொல்லும் போது ஐ.டி மற்றும் பாஸ்வோட் என இரண்டு பாக்ஸ்களில் தானாக கிரியேட் ஆகி இருக்கும்...
அதை எஸ்.எம்.ஸ் மூலமாக அல்லது டெலிபோன் மூலமாக அல்லது மெயில் மூலமாக பெற்று கொண்டு உங்கள் கணிணியை உள்ள அதெ டீம் விவ்வர் மென்பொருளை இயக்கவும் இப்போது வலது புறம் தாங்கள் பெற்ற ஐ.டியை கொடுத்துவிட்டு பாஸ்வேர்டையும்
கொடுத்துவிடவும் பிறகு லாகான் பொத்தானை அழுத்தி வெளியில் உள்ள கணிணியை உங்கள் கணிணியின் மூலம் ஆக்ஸ் செய்யலாம்
இதர வசதிகள்:
இது ஆடியோ வீடியோ சாட்:
இது கோப்புகளை உங்கள் கணிணிக்கு தரவிறக்கம் செய்ய..
கிடைக்கும் இடம்: http://www.teamviewe...load/index.aspx
0 கருத்துரைகள்