www.tamil.com.nu

முயற்சி இருந்தால்
சிகரத்தையும் எட்டலாம்

இணையதளங்களின் புதிய தகவல்களை ஈமெயிலில் பெற

இணையதளத்தில் வருகின்ற புதிய தகவல்களை ஈமெயிலில் பெறுவதை பலர் விரும்புகின்றனர். ஒவ்வொரு தளமாக சென்று புதிய தகவல் வந்துள்ளதா என்று தினசரி பார்ப்பதை விட, புதிய தகவல்கள் வரும் போது அவை அவர்கள் ஈமெயிலுக்கு வந்து சேர்ந்தால் அவற்றை ஒரே இடத்தில் வாசித்து கொள்ள முடியும்.
ஈமெயில் ஒரு சிறந்த சேமிப்பகமாகவும் திகழ்கிறது. மீண்டும் எப்போதாவது தகவல்கள் தேவைப்படும் போது அவற்றை ஈமெயிலில் எளிமையாக தேடி அணுகிக் கொள்ள முடியும். எனவே தனது ஈமெயிலில் விரும்பிய படைப்புகளை சேமித்து வைப்பதை வாசிப்பவர் விரும்புகிறார்.

சில இணையதளங்கள், சில வலைப்பதிவுகள் ஈமெயில் மூலம் சந்தாதாரர் ஆகும் வசதியைக் அளிக்கின்றன. அதன் மூலம் வாசகர்கள் தகவல்களை தன் ஈமெயிலில் பெற்று கொள்ளுகின்றனர். நமது இந்த வலைப்பதிவில் கூட அந்த வசதியை அளித்து உள்ளேன்.
இந்த வசதியை வலைப்பதிவுகள் / இணையதளங்களில் எப்படி வழங்குவது?

பெரும்பாலான இணையதளங்கள் ஈமெயில் சந்தா வசதியை அளிப்பதில்லை. ஆனால் சில பயனர்கள் அந்த வசதியை விரும்புகின்றன. சிலர் மின்னஞ்சல் சந்தா வழங்காத தளங்களில் வரும் புதிய இடுகைகள் / தகவல்களை எப்படி ஈமெயிலில் பெறுவது என்று சந்தேகம் கேட்டு இருந்ததனர்.
RSS செய்தியோடை வசதி வழங்கும் எந்த தளத்தின் புதிய தகவல்களையும் நீங்கள் ஈமெயில் மூலம் பெற முடியும்.


ஓரளவுக்கு இணையம் சார்ந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் நீங்கள் இடுகையில் குறிப்பிட்டு இருந்தபடி Feedburner மூலம் எவரும் எந்த தளத்திற்கும் ஈமெயில் சந்தா வசதியை உருவாக்கி கொள்ள முடியும். பீட்பர்னரில் உங்கள் கூகிள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொண்டு, நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியை கொடுத்து ஒரு புதிய RSS செய்தியோடையை உருவாக்கி கொள்ளுங்கள்.

பின்பு கிடைக்கும் செய்தியோடை ( உதாரணத்திற்கு http://feeds2.feedburner.com/tvs50 )  பக்கத்தின் 'Get _____________ delivered by email' என்ற சுட்டியை கிளிக் செய்து கொண்டு உங்கள்  ஈமெயில் முகவரியை அளித்து சந்தாதாரர் ஆகி விடுங்கள். இது போன்று எந்த தளத்திற்கும் எத்தனை செய்தியோடைகளையும் உருவாக்கி நீங்கள் ஈமெயில் சந்தாதாரர் ஆகலாம்.
இந்த செயல்முறை கொஞ்சம் கஷ்டமா இருக்கு என்று நினைப்பவர்களுக்கு ஒரு எளிய தளத்தை பற்றி சொல்லுகிறேன். இதன் ஒரே பின்னடைவு மொத்தம் ஐந்து தளங்களை மட்டுமே நீங்கள் இணைத்து உபயோகித்து கொள்ள முடியும். அதற்கு மேல் அதிக தளங்களுக்கு இந்த வசதியை உபயோகிக்க வேண்டுமென்றால் காசு கேட்பார்கள்.

FeedMyIbox.com - இந்த முகவரிக்கு சென்று விரும்பிய இணையதள / வலைப்பதிவு முகவரி , உங்கள் ஈமெயில் கொடுத்து விட்டு 'Submit' கிளிக் செய்தால் போதும். உங்கள் ஈமெயில் முகவரிக்கு அதனை உறுதிப்படுத்த ஒரு ஈமெயில் அனுப்பி இருப்பார்கள். அதில் உள்ள சுட்டியை கிளிக் செய்து விடுங்கள். (குறிப்பு : உடனடியாக பழைய இடுகைகள் அனைத்தும் உங்கள் மெயிலுக்கு வராது. வரும் காலங்களில் புதிதாக வரும் இடுகைகள் மட்டுமே வரும். அதிகபட்சம் 24 மணி நேரம் ஆகும்.)
அவ்வளவுதான். இனி நீங்கள் கொடுத்த இணையதளத்தில் புதிய இடுகைகள் / தகவல்கள் வரும் போது அவை அனைத்தும்  ஒரு நாளைக்கு ஒரே மெயிலாக உங்களை வந்தடையும். அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து அறிய மேலே உள்ள வீடியோவை பாருங்கள்.
ஐந்திற்கு மேற்பட்ட தளங்களில் உபயோகிக்க இந்த வசதி பயன்படாது. அது போன்ற நேரங்களில் மேலே கூறிய பீட்பர்னர் (Feedburner) முறையை பயன்படுத்தவும்.

thanks:tvs5o

0 கருத்துரைகள்

Kommentar veröffentlichen

Powered By Blogger