www.tamil.com.nu

முயற்சி இருந்தால்
சிகரத்தையும் எட்டலாம்

image Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?
ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன.
இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம்
வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம் உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்
•முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
•பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்
ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil
பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
இங்கு
tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி
குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற
file ஐ double click செய்தல் வேண்டும் .
Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.
இதில்
கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock
செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க
வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம்
key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .

 

thanks NUVILAN

0 கருத்துரைகள்

Kommentar veröffentlichen

Powered By Blogger