KeyLemon
ஒரு புண்னகை போதும்.
மடிக்கணனியை திறந்து உங்கள் முகத்தை அதற்க்கு காட்டுங்கள்-Webcam மை ஒரு சிறிய பார்வை பார்த்தால் போதும், விண்டோஸுக்கு நுழைந்து விடலாம்(Log-In)."Q" நிறுவணத்தின் இக் கண்டுபிடுப்பு James-Bond-படங்களில் வரும் புனைக்கதைகள் அல்ல.விண்டோஸுக்குள் Log-In செய்வதற்க்கு முகத்தை passwordஆக பயண்படுத்த உதவுகிறது இந்த மென்பொருள்.
முகங்களை அடையாளம் காணும் இந்த மென்பொருள், கோப்புக்களில் இருக்கும் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறது. குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்க்கு இப்படிப் பட்ட மென்பொருட்கள் பரவளாக பயண்படுத்தி வரப்படுகிறது.007-போன்றே கமராவை பர்த்ததும் உங்கள் கணனி உங்களை அடையாளம் கண்டுவிடும்.விண்டோஸ் Startஆகும் போது தலையை சொரிந்தவாரு password நிணைவுபடுத்த வேண்டிய தொந்தரவு இனி இல்லை.
Firefox உலாவியில் இதற்கான Plug-in (சொருகி) இருப்பதால் Facebook, Twitter போன்ற சமுக வளைபிண்னல்களிலிம் இதை பயண்படுத்தலாம்.
James Bond திரைபடங்களில் தன்னுடைய கார், கைகடிகாரம் மற்றும் மணத்துனையை மாற்றினாலும், ஒரு விடையம் அவரை எப்போதும் காட்டிக்கொடுத்துவிடும். ரிலக்ஸான அவருடைய முக பாவனையும் அவருக்கே உரிய பான்ச் டாயலாக்கும்.
அதேபோலதான் KeyLemonனும் முகத்தை வைத்தே பவணையாளரை அடையாளம் கண்டுவிடும்.
இவ் மென்பொருளை நிறுவியபின் Setup-Assistenten உங்களுக்கு தொடர்ந்து என்ன செய்யவேண்டும் என்பதை நிணைவு படுத்தும்.
உங்கள் Webcam பொருத்தப்பட்டும் அதற்கான இயற்கி நிறுவப்பட்டும் இருந்தால் கமராவை பார்த்து சிறிக்கவேண்டியதுதான் மிச்சம். மீதியை தானே சரிபார்த்துக்கொள்ளும்.
KeyLemon ஒரு முறை நிறுவப்பட பின் Windows-Start கடவுச்சீட்டு தேவைப்படும் இடத்தில் செயல்படும். கடவுசீட்டுக்கு மாற்றிடாக கமராவைப் பார்த்து ஒருமுறை சிறித்தாலே போதும், உங்கள் விண்டோஸுக்குள் வந்து விடுவதற்க்கு.
உங்கள் முகத்தை KeyLemon புகைப்பட கோப்புக்களுடன் ஓப்பிட்ட பின் நீங்கள் கணனியில் வேளை செய்வதற்கு உங்களை அனுமதிக்கிறது. கணனிக்கு முன் ஒருவரும் இல்லாவிட்டால் அல்லது தெரியாத வெறொரு நபர் வந்து உட்கார்ந்தால் தானாகவே எவரும் கணினியை பார்வையிடத படி தடைசெய்து விடுகிறது.
Facebook, Twitter & Co போன்றவற்றை பார்வையிடுவதற்கு உங்கள் தனிநபர் தகவள் மற்றும் கடவுச்சீட்டை கொடுக்க வேண்டிய அவசியம் இனிமேலும் இல்லை.இதற்கு Firefox-Plug-in துணைபுரியும்.
இவ்வகையான சமுகப் பிண்னள் வலையமப்புக்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. ஒன்ற?இரண்டா? இப்படிப்பட வளையமைப்புக்கள். உலகத்தில் இருக்க கூடிய அனைத்து சமுக வளையமைப்புக்களையும் எம்மவர் விட்டுவைப்பதில்லை.
இனி உங்கள் தனிநபர் தகவள் மற்றும் கடவுச்சீட்டை கொடுப்பதற்கு பதிலாக கமராவைப் பார்த்து ஒருமுறை இழிச்சாலே போதும்," நீங்கள் உள்ளுக்குள்".
அன்புடன்
பவணம்
0 கருத்துரைகள்