நேற்று உலகெங்கும் விண்டோஸ் 7 வெளியானது.
ஏற்கனவே நான் செய்த முற்கூட்டிய பதிவினால் (pre-order) நேற்றே எனக்கு அதன் முழுமையான DVD கிடைத்தமையால், அதனை உடனடியாகவே Install பண்ணிவிட்டேன்.
மென்பொருள் உருவாக்கல் துறையில் இருப்பதால் (Business Software Development), Windows 7 இன் வருகை எனக்கு பலவழிகளில் அனுகூலமானது. முக்கியமாக இந்த துறையில் வணிக தள இணைய மென்பொருள் உருவாக்கலில் (Web application development) ஈடுபடுபவர்கள் ஒரு சாராராகவும் (web developers) இணையத்தில் இயங்காது விண்டோசில் இயங்கும் மென்பொருள் தயாரிப்பவர்கள் (Application developers) இன்னொரு சாரராகவும் இருப்பர்.
ஆனால் மைக்ரோசொவ்ட் இன் WFP (Windows presentation layer) அறிமுகத்தால், இந்த வேறுபாடு அருகப்பட்டு (eliminate செய்யப்பட்டு) ஒன்றாக்கும் முயற்சி எடுக்கப்படுகின்றது. இந்த முயற்சிக்கு இந்த புதிய இயங்குதளம் (Operating system) பேருதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால் இதன் வருகை எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் உத்வேகம் தரும் ஒரு விடயம் என்பதால் முதல் நாளே அதனை வாங்கி install பண்ணி விட்டேன்
எப்பவுமே புதிய OS (Operating System) பல விடயங்களில் பிரச்சனையையும், புதிய அணுகுமுறைகளையும் கொண்டிருக்கும்.
வழக்கமான மிகப் பழகிய விடயங்களே செய்ய முடியாமல் இருக்கும். எனக்கும் முதல் நிமிடத்தில் இருந்தே இப்படி பல பிரச்சனைகளை, புதிய அணுகுமுறைகளை எதிர்நோக்கி வருகின்றேன். சிலவற்றிற்கு தீர்வும் கண்டுள்ளேன்.
அவ்வகையான பிரச்சனைகளையும், புதிய அணுகுமுறைகளையும் முடிந்தளவுக்கு இங்கு தர முற்படுகின்றேன்.
இங்கு தெரிவிப்பவை அனைத்தையும் மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் MSDN Forums இலும் (Subscriber நான்) என் சொந்தப் பெயரில் எழுதுகின்றேன்
பிரச்சனை 1: Quick Launch Disabled (Quick Launch எனும் குறுக்கு வழி bar இனைக் காணவில்லை)
தீர்வு:
1. windows task bar இல் mouse இனைக் கொண்டு சென்று Right click பண்ணவும்
2. Tool bars-->New folder என்பதை தெரிவு செய்யவும்
3. அதில் C:\Users\Owner\AppData\Roaming\Microsoft\Internet Explorer\Quick Launch இனை அல்லது %userprofile%\AppData\Roaming\Microsoft\Internet Explorer\Quick Launch இனை இடவும்
4. ஹையா... Quick Launch வந்தாச்சு
பிரச்சனை 2: MSN Messenger ஆனது Minimize ஆகாமல் Status bar இல் இருந்து வெறுப்பேத்தும்.
தீர்வு: இன்னமும் MSN இன் Windows 7 இற்குரிய சரியான பதிப்பு வரவில்லை. எனவே
1. MSN இன் shortcut இற்கு சென்று (அநேகமாக C:\program files\windows live என்றோ அல்லது, உங்களின் root directory இற்கு ஏற்ப D அல்லது E: என்று வரும்.
2. Right click பண்ணி அதன் properties இன் Compatibility இனை தெரிவு செய்யவும்
3. அதன் Drop list இல் Windows XP (SP2) இனை தெரிவு செய்யவும்
4. இப்ப Ok செய்து விட்டு MSN இனை Minimize செய்யவும். பிரச்சனை தீர்ந்தது
Windows 7 இல், ஏனைய முன்னைய OS களில் இருந்த classic start menu இல்லை. XP யிலும் Vista விலும், இவற்றினை மீளக்கொண்டுவரும் விதம் இருந்தது. ஆனால் விண்டோஸ் 7 இல் இதனை அறவே நீக்கிவிட்டனர் (சிலவேளை Service Pack களின் போது மீண்டும் கொண்டு வரலாம்).
ஒரு சில வெளியார்கள் (3rd party) இதனை தயாரித்து வெளியிட்டும் உள்ளார்கள். கீழே இருக்கும் முகவரியில் அத்தகைய ஒன்று உள்ளது. விரும்பியவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்
தரவிறக்கம் செய்ய
நன்றி
நிழலி
0 கருத்துரைகள்