Linux Mint: Release Candidate
clip_image002
Linux-Distribution Mint –ன் நிறுவணர் Clement Lefebvre, தனது Blog-ல், Release Candidate Mint 7 "Gloria" வை வெளியிட பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த Linux-இயங்குதளமான Mint அதிகமாக விரும்பபடும் Distribution Ubuntu அடித்தளமாக கொண்டது.அதோடுகூட இன்னும் அதிக பயண்பாடுகளை அதற்குள் இணைத்துள்ளது.
இதன் மூலம் Linux பயண்படுத்துவதற்கு எழிதான இயங்குதளமாக மாறுகிறது. கடந்த 23.சித்திரை மாதம் Ubuntu தனது புதிய பதிப்பை, Version 9.04 "Jaunty Jackalope" , வெளியிட்டதை தொடர்ந்து, Mint-தயாரிப்பாளர்கள், தங்கள் இயங்குதளத்தை புதிப்பித்திருக்கிறார்கள்.
Mint 7 தனது அடிதளைத்தை Linux-Kernel 2.6.28 மீது அமைத்துள்ளது. Ubuntu தனது இயங்குதளத்தில் கொண்டுவந்த மாற்றங்களோடு, மேலும் சில மேம்பாடுகளை கொண்டுவந்துள்ளது.
உதாரணமாக, Gnome-Desktop Version 2.26, Xorg 7.4 மற்றும் புதிய Artwork. குறிச்சொற்களை தேடுதல், மற்றும் புதிய செயலிகளை நிறுவதள்களும் மேலும் எழிதாகப்பட்டுள்ளது.
இந்த Release Candidate வல்லுனருக்கே தற்போது ஏற்றதாக இருக்கிறது. இவர்கள் இதை இன்னும் மேம்படுத்துவதற்கு, அதனில் உள்ள சில தவறுகளை கண்டுகொள்ள உதவுகிறார்கள்.
எனவே இறுதி பதிப்பு வெளி வரும் காத்திரிப்பதே மேலானது.
இந்த புதிய இயங்குதளம் பற்றி அறிந்துகொள்ள படத்தில் சொடுக்கவும்.
0 கருத்துரைகள்