www.tamil.com.nu

முயற்சி இருந்தால்
சிகரத்தையும் எட்டலாம்

PDF பைல்களை இமேஜ்(jpg,gif,bmp,png,tif) பைல்களாக மாற்ற

 

PDF பைல்களை எப்படி நாம் இமேஜ் பைல்களாக மாற்றுவது என்று இங்கு காணபோகிறோம். இந்த வேலையை ஒரு சிறிய மென்பொருள் நமக்கு எளிதாக செய்து முடிக்கிறது.
இந்த மென்பொருள் பதிவர்களுக்கு மிகவும் தேவையான மென்பொருள் ஏனென்றால் நாம் ஏதேனும் PDF பைல்களை நம் பதிவில் சேர்க்க வேண்டுமென்றால் அதனை நேரடியாக சேர்க்க முடியாது அந்த பைல்களுக்கான Embeded உருவாக்க இன்னொரு தளத்தின் உதவியை நாட வேண்டிவரும். அதனால் நம் நேரம் தான் விரயம் ஆகும்.  அது மட்டுமில்லாமல் இன்னொரு தளத்தில் உறப்பினர் ஆக வேண்டும். இந்த குறையை தவிர்க்கவே இந்த அறிய மென்பொருள்.
மென்பொருளின் பயன்கள்:

நிட்ரோ பி.டி.எப். ரீடர் (Nitro PDF Reader)

 

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர், இப்போது தங்களுடைய பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க, அடோப் பிடிஎப் ரீடருக்குப் பதிலாக, வேறு பி.டி.எப். ரீடர்களைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதற்குக் காரணம், பல வைரஸ் புரோகிராம்கள், அடோப் நிறுவன அப்ளிகேஷன் புரோகிராம்களைக், குறிப்பாக அடோப் பி.டி.எப். ரீடர் தொகுப்பினைப் பயன்படுத்தியதுதான். இதற்கு வேறு காரணங்களும் இருந்தன. இந்த புரோகிராம்களில், பிடிஎப் பைல்கள் வேகமாக இறங்கின. சிறப்பான கூடுதல் வசதிகளும் தரப்பட்டன. இவற்றில் பிரபலமானவை பாக்ஸ்இட் ரீடர், சுமத்ரா மற்றும் பிடிஎப் எக்சேஞ்ச் வியூவர் ஆகும்.
அண்மையில் இன்னுமொரு பிடிஎப் ரீடர் தொகுப்பினைக் காண நேர்ந்தது. இதன் பெயர் நிட்ரோ பிடிஎப் ரீடர் (Nitro PDF Reader). இதுவும் மற்ற பிடிஎப் ரீடர்களைப் போல இலவசமாகவே கிடைக்கிறது. இது மற்றவற்றைக் காட்டிலும் வேகமாகவே இயங்குகிறது. இதில் தரப்படும் எடிட்டிங் மற்றும் சேவிங் வசதிகள் மற்றவற்றிலிருந்து வேறுபட்டு உள்ளது.இதன் அனைத்து ஆப்ஷன்களும், அதன் ஹெடரிலேயே தரப்பட்டுள்ளதால், அவற்றை அணுகிப் பெறுவது எளிதாகிறது.இதில் எடிட் செய்யப்படும் பிடிஎப் பைல்கள், மற்ற பிடிஎப் ரீடர் புரோகிராமிலும் படிக்க முடிகிறது. விண்டோஸ் 32 மற்றும் 64 பிட் இயக்கத் தொகுப்புகளுக்கென இது உருவாக்கப்பட்டுள்ளது. அவசியம் இதனை நீங்கள் பயன்படுத்திப் பார்க்கலாம்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

 

thanks : honeytamil

இணையதளங்களின் புதிய தகவல்களை ஈமெயிலில் பெற

இணையதளத்தில் வருகின்ற புதிய தகவல்களை ஈமெயிலில் பெறுவதை பலர் விரும்புகின்றனர். ஒவ்வொரு தளமாக சென்று புதிய தகவல் வந்துள்ளதா என்று தினசரி பார்ப்பதை விட, புதிய தகவல்கள் வரும் போது அவை அவர்கள் ஈமெயிலுக்கு வந்து சேர்ந்தால் அவற்றை ஒரே இடத்தில் வாசித்து கொள்ள முடியும்.
ஈமெயில் ஒரு சிறந்த சேமிப்பகமாகவும் திகழ்கிறது. மீண்டும் எப்போதாவது தகவல்கள் தேவைப்படும் போது அவற்றை ஈமெயிலில் எளிமையாக தேடி அணுகிக் கொள்ள முடியும். எனவே தனது ஈமெயிலில் விரும்பிய படைப்புகளை சேமித்து வைப்பதை வாசிப்பவர் விரும்புகிறார்.

சில இணையதளங்கள், சில வலைப்பதிவுகள் ஈமெயில் மூலம் சந்தாதாரர் ஆகும் வசதியைக் அளிக்கின்றன. அதன் மூலம் வாசகர்கள் தகவல்களை தன் ஈமெயிலில் பெற்று கொள்ளுகின்றனர். நமது இந்த வலைப்பதிவில் கூட அந்த வசதியை அளித்து உள்ளேன்.
இந்த வசதியை வலைப்பதிவுகள் / இணையதளங்களில் எப்படி வழங்குவது?

பெரும்பாலான இணையதளங்கள் ஈமெயில் சந்தா வசதியை அளிப்பதில்லை. ஆனால் சில பயனர்கள் அந்த வசதியை விரும்புகின்றன. சிலர் மின்னஞ்சல் சந்தா வழங்காத தளங்களில் வரும் புதிய இடுகைகள் / தகவல்களை எப்படி ஈமெயிலில் பெறுவது என்று சந்தேகம் கேட்டு இருந்ததனர்.
RSS செய்தியோடை வசதி வழங்கும் எந்த தளத்தின் புதிய தகவல்களையும் நீங்கள் ஈமெயில் மூலம் பெற முடியும்.


ஓரளவுக்கு இணையம் சார்ந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் நீங்கள் இடுகையில் குறிப்பிட்டு இருந்தபடி Feedburner மூலம் எவரும் எந்த தளத்திற்கும் ஈமெயில் சந்தா வசதியை உருவாக்கி கொள்ள முடியும். பீட்பர்னரில் உங்கள் கூகிள் கணக்கு மூலம் உள்நுழைந்து கொண்டு, நீங்கள் விரும்பும் தளத்தின் முகவரியை கொடுத்து ஒரு புதிய RSS செய்தியோடையை உருவாக்கி கொள்ளுங்கள்.

பின்பு கிடைக்கும் செய்தியோடை ( உதாரணத்திற்கு http://feeds2.feedburner.com/tvs50 )  பக்கத்தின் 'Get _____________ delivered by email' என்ற சுட்டியை கிளிக் செய்து கொண்டு உங்கள்  ஈமெயில் முகவரியை அளித்து சந்தாதாரர் ஆகி விடுங்கள். இது போன்று எந்த தளத்திற்கும் எத்தனை செய்தியோடைகளையும் உருவாக்கி நீங்கள் ஈமெயில் சந்தாதாரர் ஆகலாம்.
இந்த செயல்முறை கொஞ்சம் கஷ்டமா இருக்கு என்று நினைப்பவர்களுக்கு ஒரு எளிய தளத்தை பற்றி சொல்லுகிறேன். இதன் ஒரே பின்னடைவு மொத்தம் ஐந்து தளங்களை மட்டுமே நீங்கள் இணைத்து உபயோகித்து கொள்ள முடியும். அதற்கு மேல் அதிக தளங்களுக்கு இந்த வசதியை உபயோகிக்க வேண்டுமென்றால் காசு கேட்பார்கள்.

FeedMyIbox.com - இந்த முகவரிக்கு சென்று விரும்பிய இணையதள / வலைப்பதிவு முகவரி , உங்கள் ஈமெயில் கொடுத்து விட்டு 'Submit' கிளிக் செய்தால் போதும். உங்கள் ஈமெயில் முகவரிக்கு அதனை உறுதிப்படுத்த ஒரு ஈமெயில் அனுப்பி இருப்பார்கள். அதில் உள்ள சுட்டியை கிளிக் செய்து விடுங்கள். (குறிப்பு : உடனடியாக பழைய இடுகைகள் அனைத்தும் உங்கள் மெயிலுக்கு வராது. வரும் காலங்களில் புதிதாக வரும் இடுகைகள் மட்டுமே வரும். அதிகபட்சம் 24 மணி நேரம் ஆகும்.)
அவ்வளவுதான். இனி நீங்கள் கொடுத்த இணையதளத்தில் புதிய இடுகைகள் / தகவல்கள் வரும் போது அவை அனைத்தும்  ஒரு நாளைக்கு ஒரே மெயிலாக உங்களை வந்தடையும். அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து அறிய மேலே உள்ள வீடியோவை பாருங்கள்.
ஐந்திற்கு மேற்பட்ட தளங்களில் உபயோகிக்க இந்த வசதி பயன்படாது. அது போன்ற நேரங்களில் மேலே கூறிய பீட்பர்னர் (Feedburner) முறையை பயன்படுத்தவும்.

thanks:tvs5o

இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்

கிளிக் செய்யாமலேயே தேடுவதற்கு ஒரு தேடியந்திரம்

 

எத்த‌னை கால‌ம் தான் கூகுலையே ப‌ய‌ன்ப‌டுத்திக்கொண்டிருப்ப‌து ஒரு மாற்ற‌ம் தேவை என‌ நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக புதியதொரு தேடியந்திரம் அறிமுகம் ஆகியுள்ளது.கூகுலை விட்டு விட்டு இனி தாரளமாக அந்த தேடியந்திரத்தை பயன்படுத்தி பார்க்கலாம்.

அட போங்கய்யா கூகுலைவிட சிறந்த தேடியந்திரமா? எத்தனை முறை இதே வர்ணனையை கேட்டு ஏமாந்திருக்கிறோம் என அலுத்து கொள்பவர்கள் கவனிக்க உண்மையிலேயே சூப்பர் தேடிய‌ந்திரம் இது என்ப‌தை உறுதியாக‌ சொல்ல‌லாம்.

ட‌க்ட‌க்கோ என்னும் விநோத‌மான‌ பெய‌ர் கொண்ட‌ அந்த‌ புதிய‌ தேடிய‌ந்திர‌ம் உண்மையிலேயே கூகுலுக்கு மாற்றாக‌ விள‌ங்க கூடிய‌ ஆற்ற‌லை பெற்றிருக்கிற‌து.

இணைய‌ உல‌கில் ச‌ற்றேர‌க்குறைய‌ இர‌ண்டாயிர‌த்துக்கும் அதிக‌மான‌ தேடிய‌ந்திர‌ங்க‌ள் உள்ள‌ன‌.இவ‌ற்றில் ப‌ல‌ அறிமுக‌மாகும் போது கூகுலுக்கு மாற்று என‌ வ‌ர்ணித்துக்கொள்வ‌து வ‌ழ‌க்க‌ம் தான்.ஒரு சில‌ தேடிய‌ந்திர‌ங்க‌ளை அடுத்த‌ கூகுல் என்று ப‌த்திரிகைக‌ள் வ‌ர்ணிப்ப‌தும் வ‌ழ‌க்க‌ம்.ஆனால் இதுவ‌ரை எந்த‌ தேடிய‌ந்திரத்தாலும் கூகுலை ஒர‌ங்க‌ட்ட முடிய‌வில்லை.

முன்னால் கூகுல‌ர்க‌ளால் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட்ட‌ குயில்(cuil) தேடிய‌ந்திர‌ம் கூட‌ இப்ப‌டி தான் கூகுலுக்கான‌ சவால் என்று அழைக்க‌ப்ப‌ட்டு ஏக‌ ப‌ர‌ப‌ர‌ப்பை ஏற்ப‌டுத்திய‌து. அத‌ன் பிற‌கு என்ன‌ ஆன‌து என்றே தெரியாம‌ல் போய் இப்போது விக்கிபீடியா பாணியில் க‌ள‌ஞ்சிய‌ தேடிய‌ந்திர‌மாக‌ தன்னை உருமாற்றி கொண்டுள்ள‌து.

தேடிய‌ந்திர‌ வ‌ர‌லாற்றை அறிந்த‌வ‌ர்க‌ள் புதிய‌ தேடிய‌ந்திர‌ங்க‌ள் வ‌ரும் போகும் ஆனால் கூகுல் எல்லோராலும் நாட‌ப்ப‌டும் தேடிய‌ந்திர‌மாக‌ தொட‌ரும் என்ப‌தை அறிந்தேயிருப்பார்க‌ள். அதிலும் சாம‌ன்ய‌ இணைய‌வாசிக‌ளை பொருத்த‌வ‌ரை தேட‌ல் என்றால் கூகுல் தான்.

கூகுல் அத‌ன் வேலையை ஒழுங்காக‌ செய்கிற‌து என்ப‌தும் அத‌னை மிஞ்ச‌க்கூடிய‌ தொழில்நுட்ப‌ம் இன்னும் சாத்திய‌மாக‌வில்லை என்னும் நிலையில் இன்னுமொரு தேடிய‌ந்திர‌மாக‌ உத‌ய‌மாகியுள்ள‌ ட‌க்ட‌க்கோ மாறுப‌ட்ட‌ தேடிய‌ந்திர‌ம் என்னும் உண‌ர்வை முத‌ல் பார்வையிலேயே த‌ந்து விய‌க்க‌ வைக்கிற‌து.

கூகுலைப்போல‌வே இன்னொரு தேடிய‌ந்திர‌ம் என்று த‌ன்னை ம‌ற்றி அட‌க்க‌மாக‌வே கூறிக்கொள்ளும் ட‌க்ட‌க்கோ கூகுலுக்கு ப‌திலாக‌ ஏன் த‌ன்னை முய‌ன்று பார்ப்ப‌த‌ற்கு என்று நெத்திய‌டியாக‌ சில‌ கார‌ண‌ங்க‌ளை ப‌ட்டிய‌லிடுகிற‌து.

கூகுலை விட‌ சிக்க‌ல் இல்லாத‌ தேட‌ல் பக்க‌ம்,விள‌ம்ப‌ர‌ இடையூறு இல்லாத‌ தேட‌ல் முடிவுக‌ள் ,சிற‌ப்பான‌ குறுக்கு வ‌ழிக‌ள் என‌ நீளும் அந்த‌ ப‌ட்டிய‌லில் உண்மையிலேயே நெத்திய‌டியான அம‌ச‌ம் பூஜ்ய‌ கிளிக் வ‌ச‌தியாகும். ஜீரோ கிளிக் என‌ குறிப்பிட‌ப்ப‌டும் இந்த‌ வ‌ச‌தியை கிளிக் செய்யாம‌லேயே தேடுவ‌து என‌ புரிந்து கொள்ள‌லாம்.

அதெப்ப‌டி கிளிக் செய்யாம‌லேயே தேடுவ‌து சாத்திய‌ம்?வழக்கமாக தேடும் போது என்ன செய்வோம்.கீவேர்டை டைப் செய்துவிட்டு தேடு என க‌ட்ட‌ளையிடுவ‌து போல‌ என்ட‌ர் த‌ட்டுவோம் அல்ல‌வா?அத‌ன் பிற‌கு தேட‌ல் முடிவுக‌ள் வ‌ந்து நிற்கும் அல்ல‌வா?அதில் ஏதாவ‌து ஒன்றை கிளீக் செய்தால் தான் தேவிஅயான் த‌க‌வ‌ல்க‌ளை பெற‌ முடியும். ஆனால் ட‌க்ட‌க்கோ தேடிய‌ந்திர‌மோ கிளிக் செய்த‌துமே  தேட‌ப்ப‌டும் ப‌த‌ம் தொட‌ர்பான அறிமுக குறிப்புக‌ளாக‌ சில‌ த‌க‌வ‌ல்க‌லை அளிக்கிற‌து.

இந்த‌ குறிப்புக‌ள் மிக‌ச்ச‌ரியாக‌ தேட‌ப்ப‌டும் பொருள் குறித்த‌ ச‌ரியான‌ அறிமுக‌மாக‌ அமைந்து விடுகிற‌து.உதார‌ன‌த்திற்கு பிரெஞ்சு ஒப‌ன் என் தேடினால் பாரிசில் மே மாத‌ம் துவ‌ங்கி ந‌டைபெறும் டென்னிஸ் போட்டி என்ற‌ அறிமுக‌ம் கிடைக்கிற‌து.ப‌ல‌ நேர‌ங‌க்ளில் தேட‌ப்ப‌டும் பொருளை புரிந்து கொள்ள‌ இந்த‌ அறிமுக‌ம் உத‌வ‌லாம். சில‌ நேர‌ங்க‌ளில் இந்த அறிமுக‌மே கூட‌ போதுமாக‌ இருக்க‌லாம்.புதிய‌ பொருள் குறித்து மிக‌ அவ‌ச‌ர‌மாக‌ தேடும் போது அறிமுக‌ குறிப்புகள் நிச்ச‌ய‌ம் ப‌யனுள்ள‌தாக‌ இருக்கும்.

விக்கிபீடியா போன்ற‌ த‌ள‌ங்க‌ளில் இருந்து எடுக்க‌ப்ப‌ட்டாலும் கூட இந்த‌ அறிமுக‌ம் ப‌ய‌னுள்ள‌தாக‌வே இருக்கிற‌து.விரிவான‌ தேட‌ல் தேவை என்றால் ப‌க்க‌வாட்டில் உள்ள‌ வ‌ச‌தியை துணைக்கு அழைத்து யூடியூப் உட‌ப‌ட‌ ப‌ல‌ இட‌ங்க‌ளில் தேட‌ முடியும்.

இந்த‌ தேடிய‌ந்திர‌த்தில் கூகுல் என‌ டைப் செய்து பார்த்தால் கூகுல் என்றால் ப‌ல‌ அந்த‌த‌ம் உண்டு உங்க‌ளுக்கு எது வேண்டும் என்று கேட்க‌ப்ப‌டு அத‌ன் கீழேயே கூகுல் என்றால் தேடிய‌ந்திர‌ம் என்ற‌ அறிமுக‌மும் இட‌ம் பெறுகிற‌து.ப‌லவித அர்த்த‌ங்க‌ளில் ஒன்றாக‌ கூகுல் என‌ முடியும் பெய‌ர் கொண்ட‌வ‌ர்களும் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர்.

இந்த அம‌ச‌த்திற்காக‌ நிச்ச‌ய‌ம் இத‌னை ப‌ய‌ன்ப‌டுத்தி பார்க்க‌லாம்.இத‌னை த‌விர‌ தேட‌ல் ப‌க்க‌ம் கூகுலைவிட‌ தெளிவான‌தாக‌ சிக்க‌லில்லாம‌ல் இருப்ப‌தாக‌ கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. அதே போல‌ தேட‌ல் வ‌ர‌லாற்றை சேமித்து வைப்ப‌தில்லை என்றும் குறிப்ட‌ப்ப‌ட்டூள்ள‌து.

இந்த‌ அம‌ச‌ங்கள் எல்லாவ‌ற்றையும் கூகுலோடு ஒப்பிட்டு பார்க்கும் வ‌ச‌தியும் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

எல்லாவ‌ற்றுக்கும் மேல் இத‌ முக‌ப்பு ப‌க்க‌ம் வ‌ண்ண‌ம‌ய‌மாக‌ வாத்து ம‌ற்றும் இத‌ர ஐகான்க‌ளோடு அழ‌காக‌வே இருக்கிற‌து.அதோடு கூகுலில் இருக்கும் அதிர்ஷ்ட‌ தேட‌ல் வ‌ச‌தியை போல‌ (ஐஅய்ம் பீலிங் ல‌க்கி) ஐய‌ம் பீலிங் ட‌க்கி என்னும் கூடுத‌ல் வ‌ச‌தியும் உண்டு.
——–

http://duckduckgo.com/?q=&t=i

THANKS:cybersimman

ஆன்லைனில் மூவி எடிட்டிங்

 

எழுதியவர் : KarthiK 16 May 2010

நீங்களாகவே தயாரித்த உங்களுடைய ஹோம் மூவீஸ்களுக்கு மெருகூட்ட திட்டமிடுகிறீர்களா? ஆன்லைனில் இந்த வேலைகளை மிக எளிதாக மேற்கொள்ள உதவுகிறது pixorial.com என்னும் இணைய தளம். எப்படி படங்களுக்கு அடோப் போட்டோ ஷாப் அல்லது அண்மைக் காலத்திய அப்ளிகேஷன் சி.எஸ். 4 உதவுகிறதோ, அதே போல பிக்ஸோரியல் என்னும் இந்த தளம் அனைத்து டூல்களையும் தருகிறது.

இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்

உபுந்து லினக்ஸ் உபயோகப்பிவர்கள் நம் தாய் மொழிகளிலேயே உபுந்துவை  இயக்கலாம், பல்வேறு முக்கிய இந்திய மொழிகள் உபுந்து லினக்ஸ் உள்ளடக்கியுள்ளன. உங்களிடம் இணைய இனைப்பு இருந்தால் போதும் மொழி எழுத்துருக்கள் மற்றும் மொழிக்கு தேவையான படிவங்களை இணையத்தில் இருந்து இறக்கி பதிந்து கொள்ளலாம்.

உபுந்து லினக்ஸை தமிழில் இயக்க

வழிமுறைகள்

Ubuntu 9.04 Supports Most of the Indian Languages

Language support என்ற அமைப்பை System->Administration->Language Support என்ற தெரிவில் தேர்ந்தெடுத்தபின்.

Ubuntu 9.04 Language

Install/Remove

Languages என்ற பொத்தானை அழுத்தவும், கீழே உள்ள கான்பிக்கப்பட்டுள்ள படத்தை போல் ஒரு சாளரம் திறக்கும்.

Ubuntu Installed Languages

இந்த சாளரத்தில் என்ன என்ன மொழிகள் பதிந்துள்ளன என்று காட்டும், இதில் தமிழ் (Tamil) மொழியை தெரிவு செய்து, அதன் அங்கங்களையும்(Components) தெரிவு செய்து Apply Changes என்ற பொத்தானை அழுத்தவும்.

Ubuntu Language Selection

பின் Languages சாளரத்தில், மேலே காண்பிக்கப்பட்டுள்ள படத்தை போல் ஒரு விதமான சிறப்பு எழுத்துருக்கள் தோன்றும் அவற்றை தெரிவு செய்து மூடினால் உங்கள் உபுந்து இயங்கு தளம் தமிழில் இயக்க தயாராகிவிட்டது.

குறிப்பு: உங்கள் உபுந்து இயங்கு தளம் தமிழில் இயக்க restart செய்ய வேண்டும்.

உபுந்து லினக்ஸில் தமிழில் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சு செய்வது எப்படி ?

உபுந்து லினக்ஸில் பலர் எப்படி தமிழில் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சு செய்வது பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, விண்டோஸ் இயங்கு தளத்தில் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சு செய்ய இலவச மென்பொருள்க்ளான NHM Writer, ekalappai anjal மற்றும் Tavultesoft’s Tamil Keyboard Layouts For Unicode தனக்கென ஒரு சிறந்த இடத்தை பெற்றுள்ளது.

லினக்ஸ் இயங்கு தளத்திற்க்கு என தமிழில் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சு செய்ய மென்பொருள் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் உபுந்து லினக்ஸில் எளிதாக ஷப்தலிபி (Phonetic) தமிழில் தட்டச்சு செய்யலாம்.

Ubuntu Key Board

மேலே காண்பிக்கப்பட்டுள்ள பட்த்தில் ஒரு தட்டச்சு icon தெரியும், அதை right click செய்து SCIM setup என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

SCIM Setup

SCIM அமைப்பை System–>Preferencesல் தேர்ந்தெடுத்தபின்

SCIM SETUP

Hotkyesல் உள்ள Trigger என்ற தெரிவுக்கு உங்களுக்கு பிடித்த விசையை (Keys) தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த தெரிவின் மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலிலும் ஒரே நேரத்தில் விசயை மாற்றிக்கொள்ளலாம்.

SCIM Keyboard setup

நீங்கள் நேரடியாக தமிழ் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சுக்கு Hotkeysஐ global setupல் செய்து கொள்ள்லாம்.

SCIM method setup

SCIM அமைப்பில் Panel என்ற optionalல் GTK என்பதை தேர்ந்தெடுத்து SCIM tool barஇன் அமைப்புகளை தேர்வு செய்துகொள்ளலாம்.

SCIM tool bar

SCIM tool bar

SCIM tool bar ல் உள்ள மொழிகள்

SCIM tool bar with languages

குறிப்பு : SCIM tool bar தோன்றவில்லை என்றால் எதாவது ஒரு ஆவன கோப்பை திறந்து பார்க்கும் பொழுது SCIM tool bar மேல்மேசையின் எதாவது ஒரு இடத்தில் தோன்றும்.

 

 

Thanks: TAMILTECH

இணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்க

சில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும்.
அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு தளம் வழி செய்கிறது. பதிவு செய்யாமலேயே ஏற்கனவே உள்ள பயனர் கணக்குகளை கொடுத்து லாகின் செய்து கொள்ள முடியும்.

image Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?
ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன.
இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம்
வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம் உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்
•முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
•பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்
ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil
பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
இங்கு
tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி
குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற
file ஐ double click செய்தல் வேண்டும் .
Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.
இதில்
கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock
செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க
வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம்
key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .

 

thanks NUVILAN

Tamil Font for iPhone Safari

இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்

Tamil Font for iPhone Safari

iPhone Safariயில் தமிழ் இணையத்தளங்களை பிழையின்றி பார்க்க

பின்வரும் தகவளை வாசியுங்கள்.


Here we are going to see how we can install new Tamil font for iPhone Safari.


Requirements:
1. iPhone ( I used iPhone 3G)
2. iPhoneBrowswer ( Download Here )
3. iPhone USB Cable

 

image பொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது. இணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.
ஸ்கைபயர் (Skyfire). கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. யூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன. மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.
ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை (Touch Screen) மொபைல்களையும் ஆதரிப்பது சிறப்பம்சம்.
தமிழர்களாகிய நமக்கு ஸ்கைபெயரில் சிறப்பம்சம் என்னவெனில் தமிழ் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன. பொதுவாக ஒபேரா மினி தவிர மற்ற மொபைல் உலாவிகளில் தமிழ் இணைய தளங்களை பார்க்க முடியாது. ஒபேரா மினி இணைய உலாவியில் தமிழ் தளங்களை காண சிறிய மாற்றம் செய்ய வேண்டும். ஆனால் ஸ்கைபயர் இணைய உலாவியில் எந்த மாற்றமும் செய்ய தேவை இல்லை.
நீங்கள் மொபைல் போனில் இணையம் உபயோகிப்பவராக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக சோதித்து பார்க்க வேண்டிய இணைய உலாவி ஸ்கைபயர். இது நிச்சம் உங்களை கவரும்.
நேரடியான உங்கள் மொபைலில் இருந்து ஸ்கைபயரை தரவிறக்க உங்கள் மொபைலில் இருந்து இந்த m.skyfire.com முகவரியை அணுகுங்கள். உங்கள் மொபைலுக்கு ஏற்ற பதிப்பு தரவிறக்கப்பட்டு நிறுவப்படும்.
http://www.skyfire.com/
http://www.youtube.c...player_embedded
நன்றி - tvs50

ஆல்லைன் வீடியோ/ஆடியோக்களை சுட்டு கணிணியில் சேமிக்க...
ரியல் மீடியா பிளேயர்....
Posted Image
இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்..... ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு.... அந்த ஓடும் வீடியோவின் மீது மவுசை நகர்த்தினால் download என்று வரும்... அதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் தரவிறங்க ஆரம்பிக்கும்.....
கிடைக்கும் இடம்:http://in.real.com/
இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:My Documents\My Videos\RealPlayer Downloads

ஆர்பிட் டவுண்லோடர்....

image

பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க..
தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க எனப் பல வகையான பயன்பாடுகளில் நாம் பாஸ்வேர்டு களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம்.
சில இணைய தளங்களில் நுழைய விரும்பினால், அங்கு "உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, பணம் எதுவும் கட்ட வேண்டாம், நீங்கள் உறுப்பினர் ஆகுங்கள்' என்ற அறிவிப்பு வரும். உறுப்பினராகி விடுவோம் நாம். அவற்றிற்கும் பாஸ்வேர்டுகள் தேவை. சில தளங்களில் நுழைந்து சாப்ட்வேர்களை, டிரைவர்களை டவுன்லோடு செய்ய நினைப்போம். முதலில் உறுப்பினராகுங்கள் என அறிவிப்பு வரும். பாஸ்வேர்டு கொடுத்து அங்கும் உறுப்பினர்களாக மாறி விடுவோம்.
நமது கம்ப்யூட்டர்களில் உள்ள பைல்களை மற்றவர்கள் படித்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அந்த பைல்களுக்கும் பாஸ்வேர்டுகளைக் கொடுப்போம். இப்படி கம்ப்யூட்டர் வாழ்க்கையில் நிறைய இடங்களில் பாஸ்வேர்டுகளைக் கொடுக்க வேண்டியுள்ளது. கொடுப்பது வரை சரி. ஆனால் இவை எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டியுள்ளதே. அங்கே தான் சிக்கலே எழுகிறது. பலர் எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு பாஸ்வேர்டை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். ஏன் என்று கேட்டால், ஒரு பாஸ்வேர்டை நினைவில் வைப்பது எளிது என்கிறார்கள்.
உண்மைதான். ஆனால் அந்த பாஸ்வேர்டை உங்களுக்குத் தெரிந்தவர் கண்டுபிடித்து விட்டால் அவ்வளவுதான். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட்டை, இமெயில் அக்கவுண்ட்டுகளை அவர் பயன்படுத்த ஆரம்பித்து விடுவார். உங்களது எல்லா ரகசிய பைல்களையும் அவர் திறந்து விடுவார். பாதுகாப்பு கருதி, பலர் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி பாஸ்வேர்டுகளை வைப்பார்கள். இதுதான் சிறந்த முறை. ஆனால் அவ்வளவு பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைப்பது கடினமான காரியம்.
அந்த பாஸ்வேர்டுகளை மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பது முக்கியம். அவர்களுக்கு உதவிடும் பொருட்டு இந்த கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது. சில வழிகளை இங்கு காணலாம். எல்லாமே இலவசம்.
விண் ஜிப்: உங்களது லாகின் பெயர்களை பாஸ்வேர்டுகளை எல்லாம் ஒரு டெக்ஸ்ட் பைலில் டைப் செய்து அந்த டெக்ஸ்ட் பைலை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள Win Zip (www.winzip.com) சாப்ட்வேர் கொண்டு என்கிரிப்ட் செய்யலாம். 256 பிட் AES என்கிரிப்ஷனை விண்ஜிப்பில் பயன்படுத்த முடியும். இந்த டெக்ஸ்ட் பைலை பிளாப்பியிலோ அல்லது யுஎஸ்பி பென் டிரைவிலோ ((Pen drive) ) சேமியுங்கள். வெளியில் செல்லும் போதெல்லாம் பிளாப்பியை அல்லது யுஎஸ்பி பென் டிரைவை கையில் எடுத்துச் செல்லுங்கள்.
பைல் 2 பைல்: www. cryplomathic.com/file2file/ தளத்தில் நுழைந்து File2File என்ற இலவச என்கிரிப்ஷன் டூலைப் பயன்படுத்தி எல்லா பாஸ்வேர்ட் விவரங்கள் அடங்கிய டெக்ஸ்ட் பைலை என்கிரிப்ஷன் செய்யுங்கள். 128 பிட் AES என்கிரிப்ஷனை நீங்கள் பயன்படுத்த முடியும்.
விண்டோஸின் என்டிஎப்எஸ்: விண்டோஸ் 2000, விண்டோஸ் எக்ஸ்பி ஆகியவற்றில் NTFS பைல் சிஸ்டம் உண்டு. ஹார்ட் டிஸ்க்கின் ஒரு பார்ட்டிஷனை என்டிஎப்எஸ்ஸாக மாற்றி அங்கு ஒரு என்கிரிப்டட் போல்டரை உருவாக்கி விடுங்கள். பாஸ்வேர்ட் விவரங்கள் கொண்ட டெக்ஸ்ட் பைலை அந்த போல்டரில் போட்டு விடுங்கள்.
வேர்ட் அல்லது எக்செல் பைல்: லாகின் பெயர்களையும், அவற்றிற்கான பாஸ்வேர்டுகளையும் ஒரு எக்செல் பைலில் அல்லது வேர்ட் பைலில் டைப் செய்யுங்கள். இனிமேல் இவற்றை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டாம். ஆனால் இந்த எக்செல் பைலை அல்லது வேர்ட் பைலை பாஸ்வேர்ட் கொடுத்து சேமியுங்கள். இந்த பாஸ்வேர்டை மட்டும் நினைவில் வையுங்கள். வேறு அக்கவுண்டிற்கான லாகின் பெயர் மற்றும் பாஸ்வேர்ட் தேவைப்பட்டால், பாஸ்வேர்ட் கொடுத்து இந்த எக்செல் அல்லது வேர்ட் பைலைத் திறந்து தெரிந்து கொள்ளுங்கள்.
விஸ்பர் 32 : www.ivory.org தளத்தில் இருந்து Whisper32 என்ற இலவச சாப்ட்வேரை டவுன்லோடு செய்யுங்கள். இதில் உங்களது எல்லா பாஸ்வேர்டுகளையும் போட்டு வையுங்கள். என்கிரிப்ஷன் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
பாஸ்வேர்ட் சேப்: லாகின் பெயர்கள், பாஸ்வேர்டுகள் போன்றவற்றை போட்டு வைக்க Password safe v1.7 என்ற இலவச சாப்ட்வேரைப் பயன்படுத்தலாம். ஆபீஸ் மற்றும் சொந்த அக்கவுண்டுகளின் விவரங்களை வெவ்வேறு டேட்டாபேஸில் போட முடியும் என்பது இதன் சிறப்பு. இதைப் பெற http://passwordsafe.sourceforge.net தளத்தில் நுழையுங்கள்.
பாஸ்வேர்ட் கார்டியன்: இலவச சிறிய புரோகிரமான Password Guardian சாப்ட்வேரைப் பெற www.cryplocentral.com/html/passgrd.html என்ற தளத்தில் நுழையுங்கள். இந்த சாப்ட்வேரை நிறுவாமலே பயன்படுத்த முடியும். பிளாப்பியிலே இந்த சாப்ட்வேரையும், பாஸ்வேர்ட் பைலையும் பதித்து விடலாம்.
ப்ரீ பாஸ்வேர்ட் கீப்பர் : Free Password Keeper என்ற இந்த சாப்ட்வேரை (http://swiss.torry.net/apps/utilities/security/freepass.zip) டவுன்லோடு செய்து, அதை அண்ஜிப் செய்து, exe பைலை இயக்குங்கள். பாஸ்வேர்ட் விவரங்களை அது என்கிரிப்ட் செய்து காக்கும் ஆற்றல் கொண்டது. இந்த விவரங்களைப் பார்வையிட பாஸ்வேர்ட் தேவைப்படும். இமெயில் முகவரிகள், வெப் தளங்களின் முகவரிகள் போன்வற்றையும் இது காக்கும். இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்படாத பல இலவச பாஸ்வேர்ட் பாதுகாப்பு சாப்ட்வேர்கள் உள்ளன. எதையாவது ஒன்றைப் பயன்படுத்தி பாஸ்வேர்டுகளை ரகசியமாக பாதுகாத்து வையுங்கள்.
thanks to sathiyamaarkkam.com

நீங்களே ரிங்ரோன் உருவாக்க ஒரு தளம்.
ஒலிவடிவத்தை விரும்பியபடி வெட்டி உங்கள் செல்பேசியில் ரிங்ரோனாக பதிய.
முதலில் இந்த தளத்திற்கு செல்லவும் http://mp3cut.net/
பிறகு Upload mp3 என்றதை அழுத்தி உங்களுக்கு பிடிச்ச பாடலோ அல்லது
ஏதாவது ஒலிவடிவத்தையோ திறந்து கொள்ளவும்.
Attached Image

KeyLemon

இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்

KeyLemon


ஒரு புண்னகை போதும்.
மடிக்கணனியை திறந்து உங்கள் முகத்தை அதற்க்கு காட்டுங்கள்-Webcam மை ஒரு சிறிய பார்வை பார்த்தால் போதும், விண்டோஸுக்கு நுழைந்து விடலாம்(Log-In)."Q" நிறுவணத்தின் இக் கண்டுபிடுப்பு James-Bond-படங்களில் வரும் புனைக்கதைகள் அல்ல.விண்டோஸுக்குள் Log-In செய்வதற்க்கு முகத்தை passwordஆக பயண்படுத்த உதவுகிறது இந்த மென்பொருள்.
முகங்களை அடையாளம் காணும் இந்த மென்பொருள், கோப்புக்களில் இருக்கும் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறது. குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்க்கு இப்படிப் பட்ட மென்பொருட்கள் பரவளாக பயண்படுத்தி வரப்படுகிறது.007-போன்றே கமராவை பர்த்ததும் உங்கள் கணனி உங்களை அடையாளம் கண்டுவிடும்.விண்டோஸ் Startஆகும் போது தலையை சொரிந்தவாரு password நிணைவுபடுத்த வேண்டிய தொந்தரவு இனி இல்லை.
Firefox உலாவியில் இதற்கான Plug-in (சொருகி) இருப்பதால் Facebook, Twitter போன்ற சமுக வளைபிண்னல்களிலிம் இதை பயண்படுத்தலாம்.
KeyLemon: Bequemes Einloggen per Gesichtserkennung.
James Bond திரைபடங்களில் தன்னுடைய கார், கைகடிகாரம் மற்றும் மணத்துனையை மாற்றினாலும், ஒரு விடையம் அவரை எப்போதும் காட்டிக்கொடுத்துவிடும். ரிலக்ஸான அவருடைய முக பாவனையும் அவருக்கே உரிய பான்ச் டாயலாக்கும்.
அதேபோலதான் KeyLemonனும் முகத்தை வைத்தே பவணையாளரை அடையாளம் கண்டுவிடும்.
இவ் மென்பொருளை நிறுவியபின் Setup-Assistenten உங்களுக்கு தொடர்ந்து என்ன செய்யவேண்டும் என்பதை நிணைவு படுத்தும்.
உங்கள் Webcam பொருத்தப்பட்டும் அதற்கான இயற்கி நிறுவப்பட்டும் இருந்தால் கமராவை பார்த்து சிறிக்கவேண்டியதுதான் மிச்சம். மீதியை தானே சரிபார்த்துக்கொள்ளும்.
Facebook & Co.: Nie wieder ein Passwort eingeben müssen.
KeyLemon ஒரு முறை நிறுவப்பட பின் Windows-Start  கடவுச்சீட்டு தேவைப்படும் இடத்தில் செயல்படும். கடவுசீட்டுக்கு மாற்றிடாக கமராவைப் பார்த்து ஒருமுறை சிறித்தாலே போதும், உங்கள் விண்டோஸுக்குள் வந்து விடுவதற்க்கு.
உங்கள் முகத்தை KeyLemon புகைப்பட கோப்புக்களுடன் ஓப்பிட்ட பின் நீங்கள் கணனியில் வேளை செய்வதற்கு உங்களை அனுமதிக்கிறது. கணனிக்கு முன் ஒருவரும் இல்லாவிட்டால் அல்லது தெரியாத வெறொரு நபர் வந்து உட்கார்ந்தால் தானாகவே எவரும் கணினியை பார்வையிடத படி தடைசெய்து விடுகிறது.
LemonFox: Das Gesicht als Schlüssel für Webdienste wie Facebook.
Facebook, Twitter & Co போன்றவற்றை பார்வையிடுவதற்கு உங்கள் தனிநபர் தகவள் மற்றும் கடவுச்சீட்டை கொடுக்க வேண்டிய அவசியம் இனிமேலும் இல்லை.இதற்கு Firefox-Plug-in துணைபுரியும்.
இவ்வகையான சமுகப் பிண்னள் வலையமப்புக்கள் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. ஒன்ற?இரண்டா? இப்படிப்பட வளையமைப்புக்கள். உலகத்தில் இருக்க கூடிய அனைத்து சமுக வளையமைப்புக்களையும் எம்மவர் விட்டுவைப்பதில்லை.
இனி உங்கள் தனிநபர் தகவள் மற்றும் கடவுச்சீட்டை கொடுப்பதற்கு பதிலாக கமராவைப் பார்த்து ஒருமுறை இழிச்சாலே போதும்," நீங்கள் உள்ளுக்குள்".

 

 

அன்புடன்

பவணம்

கீறல் விழுந்த சி.டி டிவிடியில் இருந்து தகவல்களை பெற...
Posted Image
சி.டி அல்லது டி.வி.டி வாங்குகிறோம் அதில் மிக முக்கியமான தகவல்களை சேமித்து வைத்துள்ளோம் என்று வைத்து கொள்வோம்.. ஒரு சூழ் நிலையில் வட்டவடிவமான அந்த சி.டியில் முதற் புள்ளியிலே கீறல் விழுந்துவிட்டது எனில் சி.டி டிரைவரானது அடுத்த கட்டம் நோக்கிநகராது... அதற்கு பின்னுள்ள அதாவது சேமித்து வைத்துள்ள தகவல்களையும் பெற இயலாது... என்ன செய்யலாம் அத்தகைய சூழ்நிலைகளில் கைகொடுப்பதுதான் ஐசோபஸ்டர்...
Posted Image
இதை உங்கள் கணிணியில் நிறுவுங்கள் பிறகு .. அந்த தகறாரு பிடித்த சி.டி அல்லது டி.வி.டியை டிரைவரில் சொருகுங்கள் பிறகு இந்த மென் பொருளை இயக்குங்கள்... கீறல் விழுந்த அந்த இடத்தில் உள்ள தகவல்களை தவிர.. மீதமுள்ள அனைத்தையும் உங்கள் கணிணியில் சேமியுங்கள்....

உங்கள் Iphone -ல் தமிழ் காணொளிகளை பார்வையிட

நம்மில் அநேகர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் கணொளிகளை பார்வையிடுவதற்கு tubetamil.com போன்ற இணையத்தளங்களை பயண்படுத்துகின்றோம். ஆனால் உங்கள் Iphoneல் இந்த தளத்துள் உல்ல காணொளிகளை பார்வையிட முடிவிதில்லை. காரணம் என்னவெனில் Video Flash Player என்னும் Plug-In (சொருகி) Safari உலாவியில் சொருகப்பட்டில்லை என்பதே.

இப்படிப்பட்ட ஒரு Plug-In (சொருகி) எப்படி சொருகுவது என்பதை காண்பிக்க விரும்புகிறேன்.

பின் காணும் காணொளியை கவனிக்கவும்.

வருக வருக வருக
moz-screenshot-35
எமது அன்புக்குறிய இனிய வாசகர்களே, நண்பர்களே
எமது புதிய வலைத்தளத்துக்கு உங்களை அன்புடன் வரவேட்கிறோம்.
கணனி உலகில் நித்தம் நித்தம் புதிய கண்டுபிடிபுக்கள், திண்டாட , கொண்டாட வைக்கிறது மக்களை.

எமது இணையத் தளம் சுடச் சுட செய்திகளை வழ்ங்கி வந்துள்ளது.
எமது இணையத்தை கொண்டு நடத்துவதற்கு உதவி புரிந்த அணைத்து நண்பர்களுக்கும் இச்சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

நமக்கு உதவி செய்து வந்த சில நண்பர்கள் தங்கள் சொந்த வேலைப் பழுவின் அதிகரிப்பால், தொடர்ந்து இவ் இணையத்தளத்தை ஆதரிக்க முடியாது உள்ளது.

எனவே புதிய படைப்பாளர்களை தேடுகிறோம்.
தமிழில் கணினி கட்டுரைகளை எழுதுவதும் உருவாக்குவதும் கடினமான ஒரு வேலை என்பதை நாம் அறிவோம்.

 

இத் துரையி முன்னோடிகளாக நாம் இருப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் எமக்கில்லை.

உங்கள் படைப்புகளை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி

nvn.an@hotmail.com

 

அன்புடன் உங்கள் நண்பன்

பவணம் குழுவினர்

image

Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை.

அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது.
நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும்.

உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது.
ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும்.

 

கணினி திரையில் காண்பவற்றை காணொளிகளாக  (Video) அல்லது நிழல்படமாக (screenshot) எடுப்பதற்கு FRAPS மென்பொருள் (software) உதவுகிறது.

http://www.chip.de/ii/251557222_b1680172c1.gifகணினி சம்பந்தப்பட்ட கட்டுரைகளை சிலகாலமாகவே எழிதி வந்துள்ளோம்.

கணினி சம்பந்தப்பட்ட சில அலோசனைகளை அல்லது சில செயலிகளை (Programm) எவ்வாறு பயண்படுத்துவது என்பதை எழித்தின் மூலம் மட்டுமின்றி கணொளிகளாக பதிவு செய்து யூடூப்பில் (Youtube)வெளியிட விரும்பினோம்.

உதாரணமாக எவ்வாறு இணையத்தள் பக்கங்களை உருவாக்குவது?

எவ்வாறு நிழல்படங்களை கணினியில் திருத்துவது( Photo Editing)?

எவ்வாறு கணினியில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்வது?

போன்ற விடயங்களை காணொளிகளாக பதிவு செய்து வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு எந்த செயலி சிறப்பாக உதவும் என்பதை அறிய இணையத்தில் உலா வந்த போது கண்ணில் பட்ட ஒரு நல்ல மென்பொருளை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினோம்.

பொதுவாக திரையில் காண்பவற்றை நிழல்படமாக பதிவதற்கு விண்டோஸில் உள்ள பந்தமே போதுமானது.
ஆனால்
DirectX- மற்றும் OpenGL- போன்ற  செயலிகளிக்கு விசேஷச tools தேவைப்படுகிறது.
இந்த மென்பொருள் கணினி திரையை வெறும் படமாக மட்டும் பதியாமல், காணொளிகளை AVI-வடிவூட்டத்திலும் பதிகிறது.
FRAPS  பதிப்பென்: 3.0 மேலுமாக DirectX 11 மற்றும் Windows 7 அனுசரிக்கிறது.
இந்த புதிய பதிப்பில் இதன் ஆடையும் மாற்றப்பட்டுள்ளது கவணத்துக்குறியது.
இதில் என்னென்ன புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதை இதன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

 

image

 

Firefox 3.6: Beta-பதிப்பு

imageFirefox உலாவி பரவலாக பயண்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த உலாவியை தமிழிலும் முழுமையக பயண்படுத்தலாம்.

Firefox தயாரிப்பாளர்கள் Firefox 3.6 இன் முதலாவது Beta பதிப்பை வெளியுட்டுள்ளது. Beta பதிப்பென்பது, ஒரு மென்பொருளை விற்பணைக்கு வெளியிடுவதற்கு முன் அதில் உள்ள குறைகளையும் நிறைகளையும் சரியாக மதிப்பிட்டு திருத்தங்களை செய்வதற்காக , வெளியடப்படும் பதிப்பாகும்(முன்னோடம் என்றும் கூறலாம்). இந்த பதிப்பு பரீட்சித்துப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே.

SkyDrive - Windows Live

இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்

image உலகின் முன்னணி கணணி மென்பொருள் நிறுவனமான மைக்குரோ சொவ்ட் (Microsoft) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு (hotmail மற்றும் அது சார்ந்த கணக்கு வைத்திருப்பவர்களுக்கு) இணையம் வழி தரவுகளை மற்றும் கோப்புக்களை சேமித்து வைக்க என்று 25ஜி(GB)சேமிப்பு வசதியை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.
இதன் மூலம் கோப்புக்களை மற்றும் தரவுகளை உங்கள் ஹொட்மெயில் ஐடி ஊடாக கீழ் உள்ள இணைப்பில் உள்நுழைந்து உங்களுக்கான ஒரு சேமிப்பு கணக்கை உருவாக்கி அங்கு ஒதுக்கப்படும் 25ஜி சேமிப்பிடத்தில் சேமித்து வைப்பதன் மூலம் நீங்கள் எங்கிருந்தும் (இணைய இணைப்பு உள்ள இடங்களில் இருந்து) உங்கள் கோப்புக்களை தரவுகளை தேவைக்கு ஏற்ப பெற்றுக் கொள்ளலாம்.
உங்கள் கணணி மக்கர் பண்ணினாலோ.. அல்லது கணணி ஹாட் டிஸ்க் திடீர் என்று பழுதானோலோ நீங்கள் உங்கள் தரவுகளை இங்கும் சேமித்து வைப்பின் அவற்றை இழப்பின்றி மீளப் பெற முடியும். அதுமட்டுமன்றி மடிகணணியைக் காவிக் கொண்டு திரியத் தேவையில்லை. போகுமிடத்தில் இணைய வசதியும் ஒரு கணணியும் இருப்பின் தரவுகளை உங்கள் பென் ரைவில் (pen drive) சேமித்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது குறித்த கணணியிலேயே பாவித்துக் கொள்ளலாம்.
மத்திம அளவில் தரவுகளை கோப்புகளை சேமிக்க விரும்பும் மாணவர்களுக்கு அலுவலகம் செல்வோருக்கு மிகவும் உபயோகமான இலவச இணைய வழியான சேமிப்பு வசதி இது என்று சொல்லலாம்.
இதேபோன்று கூகிளும் கூடிய விரைவில் உருவாக்கித்தர இருப்பதாக சொல்லப்படுகிறது.

image

Apple Mac கணினி

இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்

image

Apple Mac கணினி வைத்திருப்பவர்கள் Microsoft இயங்குதளத்தை (Operatingssystem) நிறுவுவதற்கு BootCamp என்னும் மென்பொருள் உதவுகிறது.

Windows XP இதுவரை எந்த தடங்களும் இன்றி இதன் உதவியுடன் Mac கணினியில் இயங்கி வருகிறது.

ஆனால் இவ் இயங்குதளத்தின் ஆயுள் அதிகமாகிவிட்டதால், இதை பலரும் விரும்பி பயண்படுத்டுவதில்லை. அது மட்டுமன்றி புதிய இயங்குதளமாகிய 'Windows Seven' வாடிக்கையாளர்களிடம் அதிக ஏதிர்பார்ப்புக்களை உருவாக்கியுள்ளது.

எனவே இவ் இயங்குதளத்தை இப்போதிருந்தே அநேகர் தங்கள் Apple Mac கணினியில் நிறுவியுள்ளனர்(Install).

இருந்த போதிலும் சரியான இயக்கிகள்(Driver) இல்லாமையின் காரணமாக இது சரிவர செயல்ப்பட மறுக்கிறது.

இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக Apple நிறுவணம் BootCamp க்கான தரமுயர்த்தியை (Update) வெளியிடவுள்ளது.

இன்னும் இரண்டு மாதங்களில் கிடைக்கப்பெறும் என்று அவ் நிறுவணம் அறிக்கையிடுகிறது.

ஆவாதணம்: 2006 க்கு முண்பு நீங்கள் Mac வாங்கியிருந்தால் இந்த தறமுயர்த்தி உங்கள் கணினியில் இயங்குமா என்பதை அவதாணமாக கேட்டு அறிந்து கொள்ளவேண்டும்.

image

image நேற்று உலகெங்கும் விண்டோஸ் 7 வெளியானது.

ஏற்கனவே நான் செய்த முற்கூட்டிய பதிவினால் (pre-order) நேற்றே எனக்கு அதன் முழுமையான DVD கிடைத்தமையால், அதனை உடனடியாகவே Install பண்ணிவிட்டேன்.

மென்பொருள் உருவாக்கல் துறையில் இருப்பதால் (Business Software Development), Windows 7 இன் வருகை எனக்கு பலவழிகளில் அனுகூலமானது. முக்கியமாக இந்த துறையில் வணிக தள இணைய மென்பொருள் உருவாக்கலில் (Web application development) ஈடுபடுபவர்கள் ஒரு சாராராகவும் (web developers) இணையத்தில் இயங்காது விண்டோசில் இயங்கும் மென்பொருள் தயாரிப்பவர்கள் (Application developers) இன்னொரு சாரராகவும் இருப்பர்.

 

வணக்கம் என் நேசத்துக்குறிய வாசகர்களே,

தமிழில் கணினி பற்றிய செய்திகளை படிக்க வேண்டும் என்ற ஆவளில், இணையத்தில் உலா வந்த வேளை, தமிழில் கணினி பற்றி இணையங்களை வசித்து மகிழ்ந்தேன். வாசிக்கும் ஆர்வம், அதோடு நின்றுவிடவில்லை. கணினியில் ஆர்வம் உள்ளதால், புலத்தில் வாழ்ந்தாலும், தமிழில் எழுதுவதில் எனக்கு ஆர்வம் ஏற்பட, பல முண்னோடிகளின், ஊட்டத்தால், நானும் எழுத ஆரம்பித்தேன்.
எதுவரை செல்லும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நீங்களும் எழுத விரும்புகிறீர்களா?

உங்கள் கட்டுரைகளை கிறுக்கனின் பக்கத்தில் உங்கள் பெயருடன் பிரசுரிக்கலாம்.

உங்களுக்கு கணினி பற்றி தெரிந்த விடயங்களை எனது மின் அஞ்சளுக்கு அனுப்புங்கள். உங்கள் பேயருடன் அவை பிரசுரிக்கப்படும்.

naveenan@web.de

இப்படிக்கு
உங்கள்
கிறுக்கன்

tamilmp3songs

இடுகையிட்டது yarl 0 கருத்துரைகள்
Powered By Blogger