www.tamil.com.nu

முயற்சி இருந்தால்
சிகரத்தையும் எட்டலாம்
இடுகையிட்டது yarl

உபுந்து லினக்ஸ் உபயோகப்பிவர்கள் நம் தாய் மொழிகளிலேயே உபுந்துவை  இயக்கலாம், பல்வேறு முக்கிய இந்திய மொழிகள் உபுந்து லினக்ஸ் உள்ளடக்கியுள்ளன. உங்களிடம் இணைய இனைப்பு இருந்தால் போதும் மொழி எழுத்துருக்கள் மற்றும் மொழிக்கு தேவையான படிவங்களை இணையத்தில் இருந்து இறக்கி பதிந்து கொள்ளலாம்.

உபுந்து லினக்ஸை தமிழில் இயக்க

வழிமுறைகள்

Ubuntu 9.04 Supports Most of the Indian Languages

Language support என்ற அமைப்பை System->Administration->Language Support என்ற தெரிவில் தேர்ந்தெடுத்தபின்.

Ubuntu 9.04 Language

Install/Remove

Languages என்ற பொத்தானை அழுத்தவும், கீழே உள்ள கான்பிக்கப்பட்டுள்ள படத்தை போல் ஒரு சாளரம் திறக்கும்.

Ubuntu Installed Languages

இந்த சாளரத்தில் என்ன என்ன மொழிகள் பதிந்துள்ளன என்று காட்டும், இதில் தமிழ் (Tamil) மொழியை தெரிவு செய்து, அதன் அங்கங்களையும்(Components) தெரிவு செய்து Apply Changes என்ற பொத்தானை அழுத்தவும்.

Ubuntu Language Selection

பின் Languages சாளரத்தில், மேலே காண்பிக்கப்பட்டுள்ள படத்தை போல் ஒரு விதமான சிறப்பு எழுத்துருக்கள் தோன்றும் அவற்றை தெரிவு செய்து மூடினால் உங்கள் உபுந்து இயங்கு தளம் தமிழில் இயக்க தயாராகிவிட்டது.

குறிப்பு: உங்கள் உபுந்து இயங்கு தளம் தமிழில் இயக்க restart செய்ய வேண்டும்.

உபுந்து லினக்ஸில் தமிழில் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சு செய்வது எப்படி ?

உபுந்து லினக்ஸில் பலர் எப்படி தமிழில் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சு செய்வது பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, விண்டோஸ் இயங்கு தளத்தில் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சு செய்ய இலவச மென்பொருள்க்ளான NHM Writer, ekalappai anjal மற்றும் Tavultesoft’s Tamil Keyboard Layouts For Unicode தனக்கென ஒரு சிறந்த இடத்தை பெற்றுள்ளது.

லினக்ஸ் இயங்கு தளத்திற்க்கு என தமிழில் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சு செய்ய மென்பொருள் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் உபுந்து லினக்ஸில் எளிதாக ஷப்தலிபி (Phonetic) தமிழில் தட்டச்சு செய்யலாம்.

Ubuntu Key Board

மேலே காண்பிக்கப்பட்டுள்ள பட்த்தில் ஒரு தட்டச்சு icon தெரியும், அதை right click செய்து SCIM setup என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

SCIM Setup

SCIM அமைப்பை System–>Preferencesல் தேர்ந்தெடுத்தபின்

SCIM SETUP

Hotkyesல் உள்ள Trigger என்ற தெரிவுக்கு உங்களுக்கு பிடித்த விசையை (Keys) தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இந்த தெரிவின் மூலம் ஆங்கிலத்திலும் தமிழிலிலும் ஒரே நேரத்தில் விசயை மாற்றிக்கொள்ளலாம்.

SCIM Keyboard setup

நீங்கள் நேரடியாக தமிழ் (Phonetic) ஷப்தலிபி தட்டச்சுக்கு Hotkeysஐ global setupல் செய்து கொள்ள்லாம்.

SCIM method setup

SCIM அமைப்பில் Panel என்ற optionalல் GTK என்பதை தேர்ந்தெடுத்து SCIM tool barஇன் அமைப்புகளை தேர்வு செய்துகொள்ளலாம்.

SCIM tool bar

SCIM tool bar

SCIM tool bar ல் உள்ள மொழிகள்

SCIM tool bar with languages

குறிப்பு : SCIM tool bar தோன்றவில்லை என்றால் எதாவது ஒரு ஆவன கோப்பை திறந்து பார்க்கும் பொழுது SCIM tool bar மேல்மேசையின் எதாவது ஒரு இடத்தில் தோன்றும்.

 

 

Thanks: TAMILTECH

0 கருத்துரைகள்

Kommentar veröffentlichen

Powered By Blogger